நெல்சன் விஜய் இணையும் படத்தில் இவர் தான் ஹீரோயினாம்!!!

995256e6200ba558d9c58ac5fa6bcc48

விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் ஹீரோயின் குறித்து செம தகவல் தெரிய வந்துள்ளது.  தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடித்து தற்போது வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதை தொடர்ந்து விஜய், நெல்சன் திலிப்குமார் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் அறிவிப்புடன் ஒரு ஸ்பெஷல் வீடியோவும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 

இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயின் யார் என்பது குறித்து பல்வேறு செய்திகள் இணையத்தில் உலா வந்தன. தற்போது ஹீரோயினை படக்குழு கன்ஃபார்ம் செய்திருக்கிறதாம். 

முகமூடி படத்தில் அறிமுகமாகி, தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டேவை கதாநாயகியாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. தெலுங்கு சினிமாவில் லக்கி சார்ம்-ஆக பார்க்கப்படும் பூஜா ஹெக்டே, விஜய் படத்தில் நடிக்கவிருப்பது கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.