
செய்திகள்
அடேங்கப்பா!! பாகிஸ்தான் சிறையில் 633 இந்திய மீனவர்களா? – மத்திய அரசு ஷாக்;;
கடந்த 2012-ஆம் ஆண்டு இந்தியா – பாக்கிஸ்தான் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் ஆண்டுதோறும் ஜனவரி-1 மற்றும் ஜூலை-1 ம் தேதிகளில் இருநாடுகளிடம் உள்ள கைதிகளின் பட்டியல் வெளியிட்டு பரிமாறி கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் இந்தியாவில் 309 பாக்கிஸ்தான் கைதிகள் இருப்பதாகவும் அதோடு 95 மீனவர்கள் கைதிகளாக உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் பாக்கிஸ்தான் சிறையில் 49 கைதிகளும் 633 இந்திய மீனவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – பாக்கிஸ்தான் நாடுகளில் இருக்கும் மீனர்களை தண்டனைக்கு முன்னரே விடுவிக்க வேண்டும் இந்தியா கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தண்டனை முடிந்துள்ள 536 இந்திய மீனவர்களை விரைவில் தாயகம் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு அரசு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பாகிஸ்தான் சிறையில் இருப்பவர்கள் அனைவரும் இந்தியர்கள் தானா? என்ற கேள்விக்கு பாக்கிஸ்தான் சிறையில் இருப்பவர்கள் அனைவரும் இந்தியர்கள் தான் என உறுதியாக கூற முடியாது என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
