உ.பி-யில் பரபரப்பு!! இளைஞரின் வயிற்றில் 63 ஸ்பூன்கள் அகற்றம்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞரின் வயிற்றிலிருந்து 62 ஸ்பூன்கள் எடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் முசாபூர் நகரில் உள்ள 32 வயதுடைய நோயாளியின் வயிற்றில் இருந்து தலையில்லாமல் 62 ஸ்பூன்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக அறுவை சிகிச்சை செய்தபோது 62 ஸ்பூன்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இளைஞர் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், தனக்கு பசி எடுக்கும் போது உணவு கிடைக்காத பட்சத்தில் ஸ்பூன்கள் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக இளைஞர் தெரிவித்திருந்தார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment