சினிமாவில் 62 ஆண்டுகள்: ‘விக்ரம்’ போஸ்டரை வெளியிட்டு லோகேஷ் வாழ்த்து!

dee3510129951fbf8238578a4f1f5d76

உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் சினிமாவுக்கு வந்து 62 ஆண்டுகள் ஆனதை அடுத்து #62YearsOfKamalism என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்தி வரும் விக்ரம் படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு கமல்ஹாசன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் 

சிங்கம் எப்போதும் சிங்கம் தான் என்றும் உங்களால் நாங்கள் ஊக்குவிக்கப்படுகிறோம் என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நாயகியாக ஆண்டிரியா நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.