Connect with us

விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு!

News

விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு!

879b6b4ecd5f95c77277e6e5889a8690

விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டம் அமல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

நடப்பு நிதியாண்டில் இருந்து விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம் ஒன்றின் அறிக்கையை மத்திய அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ளது. 5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 3 தவணையாக 2000 வீதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி அளிக்கப்படும் என்றும் இதன் முதல் தவணை வழங்குவதை பிரதமர் மோடி ஏற்கனவே பிப்ரவரி மாதம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடங்கி வைத்தார் என்றும் டிஜிட்டல் முறையில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக 2000 ரூபாய் செலுத்தப்பட்டது அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் 14.5 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்ற விவசாயிகளின் பட்டியலை தயார் செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய விவசாயத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top