கிறிஸ்துமஸ் பண்டிகை! 600 சிறப்பு பேருந்துகள் – தமிழக அரசு!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக 600 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகரித்ததால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தொற்று பரவல் சற்று குறைந்து காணப்படுவதால் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் வருகின்ற ஞாயிற்று கிழமை உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

மக்களே அலர்ட்! டிச.25ம் தேதி இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

அதே சமயம் பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா செல்லக்கூடிய குடும்பத்தினர், பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக ஏராளமானோர் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனிடையே பயணிகளின் வசதிகளுக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் படி, வருகின்ற வெள்ளிக்கிழமை 300 சிறப்பு பேருந்துகள், சனிக்கிழமை 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் சார்பில் தகவலானது வெளியிடப்பட்டுள்ளது. அதே போல் வெளியூரில் இருந்து சென்னைக்கு வருவதற்கு ஏராளமான பேருந்துகள் தயார் நிலையில் உள்ள போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.