சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள்: நாளை முதல் இயக்கப்படும் என அறிவிப்பு!

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு நாளை முதல் சென்னையில் இருந்து 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் வரும் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் திருவிழா கொண்டாடப்படும் இருக்கும் நிலையில் தமிழகத்திலும் இந்த திருவிழா சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் திருவிழாவைக் கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை 300 பேருந்துகள் சனிக்கிழமை 300 பேருந்துகள் என மொத்தம் 600 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் பண்டிகை உடன் சேர்ந்து அரையாண்டு தேர்வு விடுமுறை வருவதால் ஏராளமானோர் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயிலை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.