நகைக்கடன் தள்ளுபடி! இன்னும் 5வருஷத்துல 600 புது கூட்டுறவு மருந்தகங்கள் வரும்!!

தமிழகத்தில் தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது.இந்த ஆட்சியில் பல திட்டங்கள் மக்களுக்கு மிகவும் புரோஜனம் இருப்பதாக காணப்படுகிறது.பெரியசாமி

அதன் வரிசையில் தற்போது அறிவிப்பு ஒன்றை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். அதன்படி தமிழகத்தில் இன்னும் 5 ஆண்டுகளில் 600 புதிய கூட்டுறவு மருந்தகங்கள் தொடங்கப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி நகைக்கடன் பற்றி பல முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் கீழே கடன் பெற்றிருந்தால் அதை தள்ளுபடி செய்வதற்கான அரசாணையும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் ஐ பெரியசாமி கூறியுள்ளார் .

நகை கடன் தள்ளுபடி செய்தால் 11 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என்றும் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார். கூட்டுறவு வங்கிகளில் வட்டி சதவீதம் குறைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார்.

நகை கடன் தள்ளுபடி மூலம் பல விவசாயிகள் பயனடைவர் என்பதும் தவிர்க்க முடியாத உண்மையாக காணப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களின் சார்பில் தொழில் கல்வி பயின்றவர்களுக்கு 1 சதவீதம் வட்டியுடன் கூடிய கடன் உதவி வழங்கப்படும் என்றும் அமைச்சர் ஐ பெரியசாமி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment