இரவில் குளிப்பதால் அதிக தண்ணீர் வீணாவதாக வாடகைக்கு இருக்கும் நபரை ஹவுஸ் ஓனர் அடித்ததால் அந்த நபர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது
குருகிராம் என்ற பகுதியில் 60 வயது நபர் வாடகைக்கு இருந்து வருகிறார். அவர் தினசரி இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் குளிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார். இந்த நிலையில் தினசரி அவர் குளிப்பதால் மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் வீணாகுவதாகவும் இரவில் ஏன் குளிக்கிறாய் என்றும் ஹவுஸ் ஓனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
இந்த நிலையில் ஹவுஸ் ஓனர் மற்றும் அவரது மகன்கள் இருவரும் சேர்ந்து 60 வயது முதியவர் ரோஹிலா என்பவரை சரமாரியாக தாக்கியதால் அவரது கை கால் முதுகு கண் ஆகிய இடத்தில் படுகாயம் அடைந்தது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து காவல் நிலையத்தில் ஹவுஸ் ஓனர் மற்றும் அவரது மகன்களிடம் விசாரணை செய்து மூவரையும் கைது செய்தனர்
தினசரி வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் இரவில் அதிக தண்ணீர் செலவு செய்வதால் பகலில் மற்ற வீட்டுக்காரர்களுக்கு தண்ணீர் இல்லாமல் போகிறது என்றும் ஹவுஸ் ஓனர் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தான் இந்த சண்டை நடந்து உள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் ரோஹிலாவின் புகாரின் பேரில், 3 நபர்கள் மீது பிரிவு 34 (பொது நோக்கம்), 323 இன் கீழ் எப்ஐஆர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஐஎம்டி மனேசர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) (தன்னிச்சையாக காயப்படுத்துதல்) மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ரோஹிலாவின் விரிவான மருத்துவ அறிக்கைக்காக காத்திருப்பதாக ஐஎம்டி மனேசர் காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி இன்ஸ்பெக்டர் சுபாஷ் சந்த் தெரிவித்தார். மருத்துவ அறிக்கை கிடைத்தவுடன், காயங்களின் தன்மையை நாங்கள் அறிந்து கொள்வோம், பின்னர் நாங்கள் மூன்று நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.