Connect with us

ரூபாய் 70000 கோடியில் இன்று கையெழுத்தாகும் 60 ஒப்பந்தங்கள்!!

stalin

தமிழகம்

ரூபாய் 70000 கோடியில் இன்று கையெழுத்தாகும் 60 ஒப்பந்தங்கள்!!

ஒவ்வொரு நாளும் நம் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பல்வேறு விதமான நலத்திட்டங்களை செய்து கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் சுமார் 70 ஆயிரம் கோடியில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சென்னையில் இன்று நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் 60 ஒப்பாதங்கள் கையெழுத்து ஆகின்றன. முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

60 ஒப்பந்தங்கள் மூலம் 70000 கோடிக்கு மேல் முதலீடுகள் வருவதுடன் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 21 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன் 12 முடிவுற்ற பணிகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை இன்றைய தினம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதனால் இளைஞர்கள் பெரும் நம்பிக்கையில் உள்ளனர். மேலும் படித்த பட்டதாரிகளுக்கும் இந்த திட்டங்களும் மூலமாக வேலை வாய்ப்புகள் பெருகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top