உ.பி-யில் சோகம்! பென்சில் சாப்பிட்ட 6-வயது சிறுமி மரணம்..!!

உத்தரபிரதேசத்தில் 6 வயது சிறுமி பென்சில் தோல் தொண்டைக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்திகா. மாணவி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு பயின்று வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மாணவி வழக்கம் தனது சகோதரர் அபிஷேக் மற்றும் தங்கை அன்ஷிகாவுடன் வீட்டுப்பாடம் செய்து வந்ததாக தெரிகிறது.

பினாமி பெயரில் ஆ.ராசா சொத்துகுவிப்பு; அமலாக்கத்துறை முடக்கம்!!

இதற்கிடையில் பென்சில் தேவைப்பட்தால் வாயில் ஷார்பனரைப் வைத்துக்கொண்டு பென்சிலை சீவிகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பென்சில் தோல் தொண்டை பகுதியில் சிக்கியுள்ளது.

இதனால் சிறுக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே பதறிப்போன பெற்றோர்கள் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

பொங்கல் பரிசு; ரூ.1000 வழங்க முதல்வர் உத்தரவு!

இத்தகைய சம்பவம் சிறுமியின் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பிரேத பரிசோதனை செய்ய மறுத்த விட்டு சிறுமியின் உடலை வீட்டிற்கு எடுத்து சென்றதாக தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.