ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஆறு பேர் உயிரிழப்பு ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் தல்லாரேவு பைபாஸ் சாலையில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 6 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் பலத்த காயம் அடைந்தனர்.
தாளரேவு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 6 பெண்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பேருந்து அதிவேகத்தில் வந்ததால் வளைவில் கட்டுபாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோவில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். தனியார் பேருந்து மோதிய போது ஆட்டோவில் 8 பேர் இருந்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பான முழு விவரங்களும் இறந்தவர்களின் விவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.