ஜெராக்ஸ் போட வந்து, 6 பவுன் தாலியை ஆட்டய போட்ட நபர்… அதிச்சியில் பெண்

விருத்தாசலம் பேன்சி கடையில் ஜெராக்ஸ் போடுவதாக கடையின் உள்ளே வந்த மர்ம நபர் பெண் உரிமையாளரை தாக்கி ஆறு பவுன் தாலி சரடு பறிப்பு விருத்தாசலம் போலீசார் விசாரணை

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மகாலட்சுமி ராயல் நகர் பகுதியைச் சேர்ந்த நரசப்பா இவரது மனைவி கமலக்கண்ணி (வயது 50) இவர் விருத்தாசலம் சக்தி நகரில் சதீஷ் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார் அதில் ஜெராக்ஸ் மிஷன் வைத்துள்ளார்

இந்த நிலையில் இன்று மதியம் மர்ம நபர் ஒருவர் திருமண பத்திரிக்கை எடுத்து வந்து ஜெராக்ஸ் எடுக்க கொடுத்துள்ளார் அப்பொழுது கமலக்கண்ணி ஜெராக்ஸ் எடுக்கும் போது திடீரென்று அந்த மர்ம நபர் கமலக்கண்ணியை சுத்தியால் பின் பக்க தலையில் தாக்கியுள்ளார் இதில் பலத்த காயம் ஏற்பட்டு கமலக்கண்ணி மயங்கி விழுந்துள்ளார்

பின்னர் அவர் அணிந்திருந்த தாலி சரடு 6 பவுனை மர்ம நபர் அறுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார் பின்னர் கமலக்கண்ணி எழுந்து பார்த்து அக்கம் பக்கத்தினர் இடம் தகவல் கொடுத்தனர் அதன் பேரில் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்

இதுகுறித்து விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர் பட்டப் பகலில் வீடுகள் இருக்கும் பகுதியில் கடையின் உள்ளே மர்ம நபர் புகுந்து பெண்ணை தாக்கி தாலி சரடு பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment