ஹிஜாப் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 6 மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!!
பிப்ரவரி 1ஆம் வாரம் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் சர்ச்சை கிளம்பியது. அதன் மீது கர்நாடக மாநில அரசு பள்ளி கல்லூரிகளுக்கு இஸ்லாமியர்களுக்கு ஹிஜாப் அணிவதை தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு சென்றது. அங்கு நேற்றைய தினம் கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி கர்நாடக மாநில அரசு விதித்துள்ள ஹிஜாப் அணிவதற்கு விதித்துள்ள தடை தொடரும் என்று கூறியிருந்தது. இதனால் இஸ்லாமிய மாணவிகள் பெரும் சோகத்தில் இருந்த நிலையில் ஹிஜாப் தடையை எதிர்த்து வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது.
இதனால் இஸ்லாமிய மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த ஆறு மாணவிகளை பகுதிக்குள் சேர்க்காததால் சர்ச்சை ஏற்பட்டது.
இஸ்லாமிய பெண்களுக்கு ஆதரவாக சில பள்ளி கல்லூரிகளில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்துத்துவ மாணவ மாணவியர் காவி உடை அணிந்து போராட்டம் நடத்தினர். அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து பள்ளி கல்லூரிகள் சிலநாட்களுக்கு மூடப்பட்டது.
மத அடையாளங்களுடன் மாணவர்கள் வகுப்புக்கு செல்ல கூடாது என உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. ஹிஜாப் அணிய தடை விதித்தது எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆடை கட்டுப்பாடுகளை விதிக்க கல்வி நிறுவனங்களுக்கு உரிமை உண்டு என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 6 மாணவிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
