Connect with us

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு!!!

202004170942245074 Tamil News youth one month jail sentence for went to see his SECVPF

தமிழகம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு!!!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த போதிலும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் இன்னும் குறைந்தபாடில்லை. குறிப்பாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை சிறை பிடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 21-ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சூழலில் 6 ராமேஸ்வரம் மீனவர்களும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே விடுதலை ஆன மீனவர்கள் தமிழகம் வந்தடைவார்கள் என இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு விடுதலையான மீனவர்கள் மீண்டும் எல்லைதாண்டி மீன்பிடித்தால் 6 மாதம் சிறை விதிக்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக முதல்வர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top