சினிமா பாணியில் நடந்த சேசிங்; 10 வயது சிறுமி பரிதாபமாக பலி – நடந்தது என்ன?

புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களின் வெளிப்புறங்களில் உள்ள வெங்கல மணி குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துவிட்டு ஆட்டோவில் தப்பிச்சென்ற 6 பேர் கொண்ட கும்பலை சினிமா பாணியில் சேசிங் செய்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் வெளிப்புறத்தில் உள்ள வெண்கல மணி குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை கொள்ளை அடித்துக் கொண்டு ஆட்டோவில் தப்பிய ஆறு பேர் கொண்ட கும்பலை கடந்த 14ம் தேதி மாலை பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பொதுமக்கள் சுற்றி வளைத்து சினிமா பாணியில் குமார் பத்து கிலோ மீட்டர் மேல் சேசிங் செய்து அவர்களை பிடித்து தர்மா அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

மேலும் இந்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த சத்யநாராயணசாமி அவரது மனைவி லில்லி புஷ்பா மகன்கள் விக்னேஸ்வரசாமி,சுபமெய்யசாமி மற்றும் மகள்களீன் கற்பகாம்பிகா ஆதிலட்சுமி ஆகிய ஆறு பேர் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த 10 வயது சிறுமி கற்பகாம்பிகாவுக்கு காயம் ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார்.

மேலும் சிறிய காயமடைந்த சத்தியநாராயணசாமி உள்ளிட்ட ஐந்து பேர் அதை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.‌ இந்நிலையில் சிறுமியை தாக்கியது பொதுமக்கள் இளைஞர்கள் இல்லை என்றும் சிறுமியின் தந்தையான சத்திய நாராயணசாமி தான் தாக்கியினார் என்றும் துரத்தி வந்த கிராம மக்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சிறுமி உயிர் இழந்தது தொடர்பாக புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்தில் அவரது தாயார் லில்லி புஷ்பா கொடுத்த புகாரின் அடிப்படையில் 30 அடையாளம் தெரியாத நபர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்திருந்தனர். அதேபோல் உடையாளப்பட்டி காவல் நிலையத்தில் கோயில் திருட்டில் ஈடுபட்டதற்காக இந்திய நாராயணசாமி உள்ளிட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இதனிடையே கொள்ளை வழக்கில் சத்ய நாராயண சாமியை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற நிலையில் மீதமுள்ள அவரது மனைவி 2 மகன்கள் ஒரு மகள் உள்ளிட்ட நான்கு பேர் மருத்துவமனையில் உள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் உடலை அவரது தாயார் டெல்லி புஷ்பாவிடம் ஒப்படைத்து நிலையில் அவரது உடல் நேற்று இரவு காந்திநகர் அருகே உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

சிறுமி உயிர் இழந்ததை தொடர்ந்து 30 அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் சிறுமி உள்ளிட்ட கொள்ளை கும்பலை தாக்கியதாக வாட்ஸ் அப்பில் பரவிய வீடியோவை வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் புதுக்குடியான்பட்டியை சேர்ந்த செல்வம், முருகேசன் அதேபோல வைத்தூரை சேர்ந்த சந்திரசேகர்,பொங்கலாபபட்டியைச் சேர்ந்த வீரய்யா, மூட்டாம்பட்டி சேர்ந்த பாஸ்கர், மச்சுவாடியை சேர்ந்த பரமசிவம் ஆகிய ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த சிறுமியை இளைஞர்கள் உள்ளிட்ட யாரும் தாக்கவில்லை எந்த முகாந்திரமும் இல்லாமல் இளைஞர்களை காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாகவும் அதனால் அவர்களை உடனடியாக வெளியே விட வேண்டும் என்பதை வலியுறுத்தி அண்டகுளத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்களை வெளியே விட வேண்டும் கிராம மக்களை அழைத்து பேச வேண்டும் என முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். இதனை அடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அடுத்த பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment