நளினி உள்பட 6 பேர் விடுதலை: தமிழக முதல்வர் வரவேற்பு!!

நளினி உட்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்.

நடிகர் ஆர்.கே.வீட்டில் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு!!

இந்த சூழலில் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என முருகன், நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், விசாரணை அமர்வானது இன்று வந்தது.

அப்போது முருகன், நளினி உட்பட 6 பேரை விடுதலை செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில் மக்களாட்சி கோட்பாட்டிற்கு வரலாற்று சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேரின் விடுதலை அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாளை ரெட் அலெர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!!

அதே போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஆதாரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment