உ.பி-யில் பயங்கரம்!! பேருந்து மீது லாரி மோதி விபத்து.. 6 பேர் பலி!

கடந்த சில நாட்களாகவே விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் இன்னும் குறைந்தபாடில்லை. அந்த வகையில்
உத்தரபிரதேசத்தில் பேருந்து மற்றும் லாரி மோதிகொண்டதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் உள்ள லக்னோ-பஹ்ரைச் நெடுஞ்சாலையில் அதிகாலை 4.30 மணியளவில் பஹ்ரைச்சிலிருந்து லக்னோவுக்கு லாரி ஒன்று வந்துக்கொண்டிருந்தது. அப்போது லக்னோவிலிருந்து ருபைதீஹாவுக்குச் சென்ற பேருந்து மீது லாரி பயங்கரமாக மோதியது.

தொடர் கனமழை! மெயின் அருவியில் குளிப்பதற்கு தடை..!!

இதில் 15 பேர் காயமடைந்த நிலையில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விபத்து குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் தினேஷ் சந்திர சிங் கூறுகையில் “ லக்னோவில் வந்த பேருந்து மீது லாரி குறுக்கே சென்று மோதியதாக தெரிவித்துள்ளார். அதோடு விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் தப்பியோடியதாகவும், சிசிடிவி காட்சிகளை வைத்து ஓட்டுனரை தீவிரமாக தேடி வருவதாக” கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.