Connect with us

செல்வராகவனை அடுத்து ‘பீஸ்ட்’ படத்தில் இணைந்த மேலும் 6 நட்சத்திரங்கள்!

Entertainment

செல்வராகவனை அடுத்து ‘பீஸ்ட்’ படத்தில் இணைந்த மேலும் 6 நட்சத்திரங்கள்!

016035c2ff98c7667374d379aae899d7

தளபதி விஜய் நடித்து ‘பீஸ்ட்’ வேஸ்ட் படத்தில் ஏற்கனவே செல்வராகவன் இணைந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் 6 பேர் இந்த படத்தில் இணைந்து உள்ளதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது

சில நிமிடங்களுக்கு முன்னர் ‘பீஸ்ட்’ படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், மற்றும் லிலிபுத் ஃபரூக் ஆகிய மூவர் இணைந்து உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் லிலிபுத் ஃபரூக் என்பவர் பாலிவுட்டின் பிரபல காமெடி நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து சற்றுமுன்  ஷைன் டாம் சாக்கோ, அபர்ணாதாஸ், அங்குர் அஜித்விகால் ஆகிய மூவரும் ‘பீஸ்ட்’ படத்தில் இணைந்து உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்தடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘பீஸ்ட்’ படத்தின் அப்டேட்களை அள்ளி வழங்கி வருவதை அடுத்து விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் ஞாயிற்றுக்கிழமை கூட ஓய்வு இல்லாமல் படக்குழுவினர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடைந்து விடும் என்றும் அடுத்த மாதம் ஜனவரியில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top