Connect with us

இலங்கையிலிருந்து மேலும் ஆறு பேர் அகதிகளாக தமிழகம் வருகை!!

Sri Lankan Tamil refugees1

தமிழகம்

இலங்கையிலிருந்து மேலும் ஆறு பேர் அகதிகளாக தமிழகம் வருகை!!

கடந்த சில மாதங்களாக இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் இலங்கையில் வாழும் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு திண்டாடும் நிலைமை உண்டாகியுள்ளது.

இதனால் அங்குள்ள மக்கள் அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைய முயற்சி செய்து கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக நம் தமிழகத்திற்கு தொடர்ந்து சில நாட்களாக இலங்கை மக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தி முகாமில் தங்க வைத்தனர். இந்த நிலையில் இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் தற்போது தமிழக அமைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இலங்கையில் இருந்து மேலும் ஆறு பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.

இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த அந்த ஆறு பேரிடம் ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின் ஆறு பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து இதுவரை 101 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top