Connect with us

செம்ம அறிவிப்பு.!! ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆறுமாத கால பேறுகால விடுப்பு!!

14 1497422704 pregnant women5 600 1

தமிழகம்

செம்ம அறிவிப்பு.!! ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆறுமாத கால பேறுகால விடுப்பு!!

2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் திமுக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றது. 10 ஆண்டுக்கு பின்பு திமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமில்லாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

அவர் பதவியேற்ற அன்றைய தினம் முதல் பெண்களுக்கு பல்வேறு விதமான பயனளிக்கும் அறிவிப்புகளை வெளியிட்டு கொண்டுவந்தார். அதன்படி முதல் அறிவிப்பாக நகர்புற பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பெண்கள் இலவச பயணம் செய்யலாம் என்று அறிவித்தார்.

மேலும் தாலிக்கு தங்கம் திட்டத்தை மாற்றி உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமொன்று அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளன.

நாளுக்கு நாள் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மற்றும் பயன் அளிக்கும் திட்டங்கள் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு உதவும் திட்டமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 6 மாத கால பேறுகால விடுப்பு வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதனால் ஒப்பந்தப் பணியில் வேலை பார்க்கும் கர்ப்பிணி பெண்கள் பயன்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top