6 மாதம் கால அவகாசம்: அறிக்கை அளிப்பாரா ஆறுமுகச்சாமி?

91a6184aa7dbd2b2ff34742eeca4fae3

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்ய கடந்த அதிமுக ஆட்சியில் ஆறுமுகசாமி ஆணையம் என்று ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது 

ஆனால் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை நீடித்துக் கொண்டே வந்ததால் ஆணையத்தின் கால அவகாசமும் நீடிக்கப்பட்டு வந்தது. இதுவரை 10 முறை ஆறு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் நாளையுடன் முடிவடைந்ததை அடுத்து தற்போது மேலும் ஆறு மாத காலம் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆறு மாத காலத்திற்கு உள்ளாவது ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை முடித்து அரசுக்கு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் 

முன்னாள் முதல்வர் கடந்த 2016 ஆம் ஆண்டு மரணம் அடைந்த நிலையில் அதன் பின் ஒரு சில ஆண்டுகளில் இந்த ஆணையை அமைக்கப்பட்டது என்பது தொடர்ச்சியாக இந்த ஆணையம் அதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment