கொடூரத்தின் உச்சம்!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை; விவசாயி தற்கொலை!

திருவண்ணாமலையில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை வெட்டி கொலை செய்த விவசாயி, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

திருவண்ணாமலை அடுத்த ஒரந்தவாடி கிராமத்தில் வசித்து வந்தவர் விவசாயி பழனி, இவருக்கு வள்ளி என்ற மனைவியும், திரிஷா (15), மோனிஷா (14), சிவசக்தி (6), பூமிகா (4) என்ற 4 மகள்களும், தனுஷ் என்ற 4 வயது மகனும் உள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக விவசாயி பழனி நேற்று இரவு தனது மனைவி உள்ளிட்ட ஐந்து பிள்ளைகளையும் சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளார். இதில் ஐந்து பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.

படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமி பூமிகா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஒட்டுமொத்த குடும்பத்தையும் வெட்டிக் கொலை செய்த பழனி தானும் தற்கொலை செய்து கொண்டு உயிரை விட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.