Connect with us

ஆத்தூரில் சோகம்.. சாலை விபத்தில் 6 பேர் பலி!!

accident 1

தமிழகம்

ஆத்தூரில் சோகம்.. சாலை விபத்தில் 6 பேர் பலி!!

சேலம் மவட்டம் ஆத்தூர் அருகே பேருந்தில் ஏற இருந்தவர்கள் மீது லாரி மோதியதில் 6 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் மவட்டம் ஆத்தூர் அடுத்த பெத்தநாயக்கன் பகுதியை சேர்ந்தவர்கள் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக சென்னைக்கு வர இருந்தனர். அப்போது மணல் ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக இவர்கள் மீது மோதியது.

இந்த சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஏத்தாப்பூர் காவல்துறையினர் தப்பியோடி லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். மஞ்சள் நீராட்டு விழாவிற்காக சென்றப்போது 6 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top