கடந்த சில நாட்களாக தலைநகரில் இருக்கும் விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல், தங்கம் கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுமார் 2.83 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கம் கடந்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் 11 இலங்கை பெண்கள் உள்பட 14 பேரிடம் சோதனை நடத்தினர். அப்போது சுமார் 2.83 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கம் அவர்களிடம் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இலங்கை, தாய்லாந்து, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் என்பது தெரிய வந்ததையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், தங்கம் கடத்தல் தொடர்பாக 14 பயணியரை கைது செய்த சுங்கத் துறை புலனாய்வு அதிகாரிகள், அவர்கலிடம் தொடர்ந்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.