லண்டனில் உள்ள தமிழ்நாட்டு ஹோட்டலில் 6 அடி தோசை அமோகமாக விற்பனை ஆகும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
லண்டனில் உள்ள தமிழ் ஹோட்டலில் தமிழக பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.
குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் அந்த ஹோட்டலில் பணிபுரிபவர்கள் அனைவரும் தமிழர்களாம். தமிழக பாரம்பரிய உணவை தமிழர்களே சமைப்பதால் இந்த ஹோட்டல் அங்குள்ள மக்கள் மத்தியில் பிரபலம்.
அதிலும் வார இறுதி நாட்களில் அதிக அளவில் இந்தியாவைச் சார்ந்தவர்கள் வெகு தூரத்தில் இருந்தாலும் வந்து இங்கு உணவு அருந்திச் செல்கின்றனர்.
சாம்பார், ரசம், இட்லி, ஊத்தாப்பம், தோசை, பொங்கல் என நம்மூர் மணம் கமழ பஃபே முறையில் விற்பனை செய்யப்படும் உணவின் விலையும் மலிவு என்றே சொல்கின்றனர் வாடிக்கையாளர்கள்.
அதிலும் இந்த ஹோட்டலில் விறுவிறுவென விற்றுத் தீர்ப்பதுதான் அந்த 6 அடி தோசை.
இந்த அனகோன்டா தோசைக்கு சட்னி, சாம்பார், குருமா, கூட்டு என 10 சைடு டிஷ்கள் கொடுக்கப்படுகின்றதாம்.
இந்த 6 அடி தோசையினை சாப்பிடுபவர்களுக்கு 20,000 ரூபாய் பரிசு என்று கூற ஆளாளுக்கு போட்டியிட்டுச் சாப்பிடுகின்றனர்.