இன்னைக்கு 6 மாவட்டங்கள்! நாளைக்கு 9 மாவட்டங்கள்!! கொட்டப் போகுது கனமழை!!!

தற்போது நம் தமிழகத்தில் மழை காலம் என்பதால் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. அதன் மத்தியில் தற்போது சென்னை வானிலை மையம் தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.கனமழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அந்த ஆறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி ,கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் வடமாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களிலும் இடி ,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

வானிலை மையம்நாளைய தினம் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளைய தினம் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

கோவை ,தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூரில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

வடமாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment