எச்சரிக்கை:இன்னும் ஒரு சில மணி நேரத்தில 6 மாவட்டத்தில் பெய்ய போகுது மழை!

தற்போது தமிழகத்தில் தொடர் கனமழை பல மாவட்டங்களில் பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் மழை நீரானது ஆறு போல சாலையோரங்களில் ஓடுகிறது. தமிழகத்தில் உள்ள பல அணைகளும் தொடர்ச்சியாக நிரப்பப்பட்டு வருகிறது.கனமழை

உபரி நீரும் அதிக அளவில் திறந்து விடப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இவை இன்னும் ஓரிரு மணி நேரத்தில் பெய்யும் என்றும் கூறியுள்ளது.

இந்த மழை வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் ஏற்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை உட்பட 6 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment