இன்று: 6 மாவட்டங்களில் மிக பலத்த மழை! 6 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை!

நம் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது  வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

கனமழை

அதன்படி இவை தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இந்த ஆறு மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக காணப்படுகிறது. நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை,புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ள அந்த 6 மாவட்டங்களுக்கு தற்போது ரெட்அலாட்  எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

விருதுநகர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.இதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment