முன்னொரு காலத்தில் காவல்துறையினர் மீது மரியாதை கலந்த பயம் ஒன்று காணப்பட்டது. காலம் செல்ல செல்ல காவல்துறையினருக்கு மரியாதையும் குறைந்து பயமற்ற சூழலும் உருவாகியுள்ளது.
இதன் விளைவாக ஒவ்வொரு பகுதிகளிலும் காவல்துறையினர் தாக்கப்படுகின்றனர்.அவர்கள் பெண் காவலர் என்று கூட பாராமல் தாக்குதல் நடத்துவது மிகுந்த வேதனை அளிப்பதாக காணப்படுகிறது.
இந்த நிலையில் பெண் காவலர் மீது தாக்குதல் செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி நகரத்தில் அரங்கேறியுள்ளது. அதன்படி கோவில்பட்டியில் பணியாற்றி இருந்த பெண் காவலர் மீது ஆறு பேர் தாக்குதல் நடத்தினர்.
அந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக இறந்தவர் உடலை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்திய பெண் காவலர் மீது இறந்தவரின் உறவினர்கள் 6 பேர் தாக்கல் செய்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான பெண் காவலர் ஜான்சிராணி அளித்த புகாரின் பேரில் 6 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ராசு, மாடசாமி, சுந்தரமூர்த்தி, மதன்ராஜ் ,சந்தனகுமார், சுரேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.