
Tamil Nadu
அதிர்ச்சி..! பொதுத்தேர்வில் 6.5 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட்….
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் 10,11,12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது. இதனால் இந்தாண்டும் பொதுத் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்தது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக நடப்பாண்டில் கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் அதற்கான அட்டவணையும் பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது.
இதனிடையே மே முதல் வாரத்தில் 10,11,12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி தற்போது இவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது நடைப்பெற்ற பொதுத்தேர்வில் சுமார் 6.5 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றக வில்லை என பள்ளிக்கல்விதுறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக 12-ம் வகுப்பில் 1.95 லட்சம், 11- வகுப்பு 2.58 லட்சம் மற்றும் 10-ம் வகுப்பில் 2.25 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
