Connect with us

6 – 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி !!

தடுப்பூசி

செய்திகள்

6 – 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி !!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இதுவரையில்  12- வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு   தடுப்பூசி செலுத்த  அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது 6 முதல் 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு  தடுப்பூசி செலுத்த அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய மருந்து  கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாக மொத்தம் 3 தடுப்பூசிகளை அவரசகால பயன்பாட்டிற்காக செலுத்த அனுமதி வழங்கியுள்ளது.

அதன் படி, தேசிய உயிரியல் மருத்து திட்டத்தின் கீழ் சைகோவ் டி என்ற கொரோனா தடுப்பூசி மருந்து 12- வயது மேற்பட்டவர்களுக்கு அவசரக்கால பயன்பாட்டிற்கு செலுத்தலாம் என அனுமதி அளித்துள்ளது.

இதே போல் 12 முதல் 14 வயதிற்குட்பட்டவர்களுக்கு கார்பிவேக்ஸ் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது 5 முதல் 12 வயதிற்குட்பட்டவர்கள் அவசரக்கால பயன்பாட்டிற்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைவருக்கும் பயன்படுத்தக்கூடிய பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசியை 6 முதல் 12 வயதிற்குட்பட்டவர்களுக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top