6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!!

நம் தமிழகத்தில் தொடரும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை கடற்கரையை கடந்தது. அதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஓரிரு நாட்கள் மட்டும் மழை குறைந்தளவு பெய்தது.

காற்றழுத்த தாழ்வு

இருப்பினும் நேற்றைய தினம் தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. ஏனென்றால் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் ஒரே இடத்தில் 6 மணிநேரத்துக்கும் மேலாக இருந்து அதன் பின்னர் காற்றழுத்த தாழ்வு பகுதி,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கூறி இருந்தது.

அதன் தொடர்ச்சியாக தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையோர பகுதியை இன்று இரவு நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட் அலர்ட்

இதனால் தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றைய தினம் ரெட் அலார்ட் என்று எச்சரிக்கப்படுகிறது.

ரெட் அலர்ட் என்பது அதிக மழைக்கான எச்சரிக்கை ஆகும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் தமிழகத்தின் மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment