திமுக தலைவராக 5வது ஆண்டு… கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை..!!!!

தமிழகத்தில் திமுக பதவியேற்று 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் தமிழக முதல்வர் தனது தந்தை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவிற்குப் பிறகு கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி திமுக தலைவராக மு.ஸ்டாலின் பொறுப்பேற்றிருந்தார். இந்நிலையில் 4 ஆண்டுகள் நிறைவடைந்த சூழலில் 5-வது ஆண்டில் தமிழக முதல்வர் அடியெடுத்து வைத்துள்ளார்.

இதன் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் அண்ணா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் தமிழக முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் திமுகவைப் பொறுத்தவரையில் வட்ட பிரதிநிதி, மாமன்ற பிரதிநிதி,இளைஞரணி செயலாளர், துணை பொது செயலாளர், செயல் தலைவர் என கட்சியின் அடிமட்டம் முதல் தொடங்கி தற்போது தமிழக முதல்வராக 4 ஆண்டுகள் கடந்து 5-வது ஆண்டில் தனது பணியை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன், முத்துசாமி, சேகர் பாபு உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டுள்ளனர். மேலும், திமுக தொண்டர்களை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.