கடந்த 5 நாட்களுக்கு முன்பு ரஷ்யா-உக்ரைன் நாட்டின் மீது போர் அறிவித்தது. இதனால் உலக நாடுகளை அச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் போர் அறிவிப்பதற்கு முன்னதாக இந்தியாவின் ஏர் இந்தியா விமானம் உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக அனுப்பப்பட்டது.
ஆனால் நடுவானில் இருக்கும்போது போர் அறிவிக்கப்பட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் டெல்லிக்கு விமானம் திரும்பியது. இதனால் உக்ரைன் நாட்டில் தவிக்கும் இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு, மாநில அரசு தீவிரம் காட்டியது.
இதன் விளைவாக அண்டை நாடுகளின் உதவியோடு இந்தியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விமானங்களில் ஏற்றி அனுப்பப்படுகின்றனர். இதுவரை உக்ரேன் இந்தியர்களை மக்களை காப்பதற்காக 4 விமானங்கள் சென்று இந்தியா திரும்பி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது உக்ரைன் இந்தியர்களை மக்களை மீட்பதற்காக சென்ற ஐந்தாவது விமானமும் டெல்லி திரும்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த விமானத்தில் 249 பேர் பயணம் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன்படி உக்ரேனில் இருந்து மீட்கப்பட்ட 249 இந்தியர்களுடன் ஐந்தாவது விமானம் டெல்லி வந்தடைந்தது. உக்ரேனில் இருந்து ருமேனியா, ஹங்கேரியா வழியாக விமானம் மூலம் இதுவரை 1100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இதுவரை 20 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த விமானத்தில் அதிக அளவு தமிழர்கள் இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.