தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5- ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

தமிழகத்தில் ஆடி மாதம் தொடங்கினாலே அனைத்து மாவட்டங்களிலும் திருவிழாக்கள் தொடங்கியது என்று கூறலாம். அந்தவகையில் தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலய திருவிழா நடைப்பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வருகின்ற ஆகஸ்ட் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக திருவிழாவில் அதிகமாக வெளிமாவட்டங்களில் இருந்து மக்கள் வருவார்கள் என்பதால் பள்ளி மற்றும் கல்லூரி  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

இருப்பினும் அன்றைய தினத்தில் அரசு பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவர்கள் மற்றும் பொதுத்தேர்வில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அறிவிப்பினால் அம்மாவட்ட மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment