
செய்திகள்
5ஜி அலைக்கற்றை; இன்று 17ஆவது சுற்று ஏலம்!!!
கடந்த பட்ஜெட் தாக்கலின் போது 5ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இவதற்கான ஏலத்தை ஜூலை மாதத்தில் நடித்தி முடிக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை தெரிவித்து இருந்தது.
அதன் படி, 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்க அதானி குழுமத்தை சேர்ந்த அதானி டேட்டா நெட்வொர்க்ஸ், ஜியோ, ஏர்டல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தன. தற்போது ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நான்காவது நாளாக இன்றும் நடைபெறவுள்ளது கூறப்படுகிறது.
கடந்த மூன்று நாட்களில்16 சுற்று ஏலம் முடித்து விட்டதாகவும், இன்று 17வது சுற்று ஏலம் தொடங்கப்படவுள்ளதாகவும் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
குறைந்த அளவில் நிறுவனங்கள் விண்ணப்பித்து இருக்கும் பட்சத்தில் 3-வதி நாள் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தொகை 1 லட்சத்து 49 ஆயிரத்து 623 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
