ஏர்டெலா? ஜியோவா? வோடபோனா? 5ஜி இணையதள சேவை-இன்று ஏலம்!!

உலகில் உள்ள பல நாடுகளில் 5ஜி இணையதள சேவையானது பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில நாடுகளில் 6ஜி இணையதள சேவையும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது வரை இந்தியாவில் 4ஜி மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் கூட பல செல்போன் நிறுவனங்கள் 5ஜி இணையதள சேவையை உள்ளடக்கிய அமைப்பினை கொண்டு தயாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் இன்று தொடங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

டெல்லியில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடங்குகிறது இந்த ஏலத்தில் ஏர்டெல், ரிலையன்ஸ், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிகிறது. தொலை தொடர்பு துறையை மேம்படுத்த 2023 ஆம் ஆண்டுக்குள் 5g சேவையை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 5g சேவை நிறுவப்படும் என்று தெள்ளத் தெளிவாகி விட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment