Connect with us

தமிழகத்தில் இன்று அதிகபட்ச உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்

News

தமிழகத்தில் இன்று அதிகபட்ச உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்

2600f3d973b4d80c2d1bab01068e5e16

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தினமும் 100ஐ தாண்டிய நிலையில் இன்று அதிகபட்சமாக 127 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5860 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 332,105ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் இன்று மட்டும் 1,179 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 115,444 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,501 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 127 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்பதும், இதனையடுத்து மாநிலத்தில் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,641 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 119 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 5236 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று 5,146 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 272,251 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

5440c2b54080996f9b02fffe30776492
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top