Connect with us

58.23 கோடி ரூபாய் சொத்து குவிப்பு! எங்கெங்கு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை?

money

தமிழகம்

58.23 கோடி ரூபாய் சொத்து குவிப்பு! எங்கெங்கு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை?

58.23 கோடி ரூபாய் சொத்து குவிப்பு! எங்கெங்கு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை?

இன்று காலை ஆறு மணிக்கு மீண்டும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடந்து கொண்டு வருகின்றனர். இதில் ரூபாய் 58.23 கோடி சொத்து குவித்து வைத்துள்ளதாகவும் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி வீடு உள்பட 6 மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

எஸ்.பி.வேலுமணி உதவியாளர் உட்பட கோவை மாவட்டத்தில் மொத்தம் 41 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. எஸ்.பி.வேலுமணி சகோதரன் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.

சென்னையில் 8 இடங்களிலும், சேலத்தில் 4 இடங்களிலும், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு இடம், கேரளாவில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அவர் அமைச்சராக இருந்த காலத்தில் 3928 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top