பங்குச் சந்தையில் கடந்த சில மாதங்களில் நஷ்டம் காரணமாக 53 லட்சம் முதலீட்டாளர்கள் வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.
இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் உள்ளது என்பதும் குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பு பின்னர் பங்கு சந்தை தள்ளாட்டத்துடன் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து பங்குச்சந்தை படு வீழ்ச்சி அடைந்து வருகிறது என்றும் அதற்கு பதிலாக தங்கம் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பங்குச் சந்தையில் பெரும் நஷ்டமடைந்ததன் காரணமாக பொருளாதார ரீதியாக பல முதலீட்டாளர்களுக்கு தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கடந்த 9 மாதங்களில் 53 லட்சம் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக மிக அதிகமாகி வருவதை அடுத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் அதிலிருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் பங்குச் சந்தையில் பல மாதங்களாக நஷ்டத்தை சந்தித்த வாடிக்கையாளர்களும் பங்குச் சந்தையில் இருந்து வெளியேறி விட்டதாகவும் தேசிய பங்குச் சந்தையின் தகவலின் படி 53 லட்சம் பேர் இதுவரை கடந்த 9 மாதங்களில் வெளியேறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேசிய பங்கு சந்தையில் 3.8 கோடி முதலீட்டாளர்கள் இருந்தனர். ஆனால் தற்போது 3.27 கோடி முதலீட்டாளர்கள் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் புதிதாக டீமேட் கணக்குகள் தொடங்குபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என்றும் மாதந்தோறும் 8% புதிய கணக்குகள் சதவீதம் குறைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணிபுரியும் நிலை கடைபிடிக்கப்பட்டதால் இளைஞர்கள் பங்குச்சந்தைக்கு அதிகம் வந்தார்கள் என்றும் ஆனால் தற்போது அலுவலகம் சென்று வேலை பார்ப்பதால் பங்குச் சந்தையில் ஈடுபட அவர்களுக்கு நேரமில்லை என்றும் அதனால் இளைஞர்களுக்கு பங்குச்சந்தை மீது ஆர்வம் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.