தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் சேதம்: அரசு தகவல்!!

தமிழகத்தில் 2583 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் ஒன்றை செய்திருந்தார். அதில் தமிழகத்தில் சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் மீண்டும் புதுப்பிக்க குழு அமைக்க வேண்டும் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணையானது நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வு முன்பு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த 2021-2022 ஆண்டும தமிழகத்தில் 2553 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளது.

அதே போல் 2022-2023 ரூ.100 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டு 3030 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் அகற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது தமிழக அரசின் பதில்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் புதிய கட்டிடம் கட்ட குழு அமைக்க கோரிய வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.