சென்னையில் 116 பேருக்கு கொரோனா, 2 பேர் உயிரிழப்பு.. இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசின் சுகாதாரத்துறை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 500க்கும் அதிகமான நபர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் சில நாட்களில் ஒருவர் அல்லது இருவர் கொரோனாவால் பலியாகி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதே ரீதியில் சென்றால் 500ஐ தாண்டி 600 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

corona

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி சென்னையில் இருவர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3563 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தொடர்ந்து 500க்கும் மேல் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வருவதை அடுத்து இன்று இருவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளது மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் நடவடிக்கை எடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் எடுத்து வருகின்றனர்

பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என சுகாதாரத் துறையை வலியுறுத்தி உள்ளது. இருப்பினும் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்றும் மாஸ்க் அணியாதவர்களுக்கு எந்தவித அபராதமும் விதிக்கப்பட்ட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பொதுமக்கள் அஜாக்கிரதையாக உள்ளனர் என்றும் 99%  பேர் மாஸ்க் அணியாமல் தான் சென்று கொண்டிருக்கின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. எனவே தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து மாஸ்க்  அணிவதை கட்டாயப்படுத்த வேண்டும் என்றும் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.