சென்னையில் சவரனுக்கு ₹528 உயர்வு! ₹37000ஐ நெருங்கும் கோல்ட்!

தொடர்ச்சியாக நம் நாளுக்கு நாள் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் வெள்ளியின் விலை பற்றிய நிலவரத்தை அறிந்து கொண்டு வருகிறோம். அதன் வரிசையில் சென்னையில் தங்கத்தின் விலை மிகவும் உயர்ந்ததாக காணப்படுகிறது.

தங்கம்

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 528 ரூபாய் உயர்ந்து விற்கப்படுகிறது. இதனால் சென்னையில் சவரனுக்கு முப்பத்தி ஏழு ஆயிரத்தை நெருங்கி விற்கப்படுகிறது.

அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 528 ரூபாய் விலை உயர்ந்து ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூபாய் 36 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இவை கிராமிலும் சற்று அதிகமாக காணப்படுகிறது. அந்த படி சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 66 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கத்தின் விலை 4620 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மாற்றம் அதிகமாகவே காணப்படுகிறது. அதன்படி சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1.30 ரூபாய்க்கு உயர்ந்து விற்கப்படுகிறது. இதனால் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 70.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 7 ஆயிரத்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment