தடுப்பூசியால் 52 நாள் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்! எச்சரிக்கை பதிவு!

திண்டுக்கல் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்தவர் தான் விஜயகுமார். அவரது மனைவி சுகன்யா. இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் சுகன்யாவிற்கு கடந்த சில நாட்கள் முன்னதாக 2வது ஆண்குழந்தை பிறந்துள்ளது .அந்த குழந்தையின் பெயர் குரு பிரசாத் .

இந்த நிலையில் நேற்று இவரது வீட்டிற்கு வந்த அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைக்கு சரியான நேரத்தில் போட வேண்டிய தடுப்பூசிகளை அரசு மருத்துவ மனையில் வந்து போடுமாறு வலியுறுத்தியுள்ளார்.

அதன் படி திண்டுக்கல் அரசு மருத்துவ மனைக்கு சென்று தடுப்பூசி போட்டு வந்துள்ளனர். பிறகு நேற்று மாலை குழந்தைக்கு காய்ச்சல் வந்துள்ளது. தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வருவது வழக்கம் தான் என நினைத்து மருத்துவமனையில் கொடுத்துள்ள மருந்தை குழந்தைக்கு கொடுத்துள்ளனர்.

அடுத்து இன்று காலை சுகன்யா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க குழந்தைக்கு குடிக்க மறுத்துள்ளது. மேலும் பால் குடித்த சிறிது நேரத்தில் குழந்தையின் வாய் மூக்குகளில் ரத்தம் வரத்தொடங்கியது. அதிர்ச்சியடைந்த தம்பதியினர் குழந்தையை தூக்கி கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவ மனைக்கு விரைந்து சென்றுள்ளனர்.

அந்த டாக்டர்கள் குழந்தை முன்னதாகவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அறிந்து குழந்தையின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தடுப்பூசி போட்டதாகவும் அதனால் தான் காய்ச்சல் வந்ததாகவும் மருத்துவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணாமலை புண்ணியத்தில் திடீரென ட்டெண்டாகி வரும் வாட்ச் சேலன்ச்! புதுசா இருக்குதே! வைரல் வீடியோ!

முறையான விளக்கம் கொடுக்காவிட்டாள் குழந்தையை வாங்க மறுப்பதாகவும் குறி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு போலீசார் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுவந்தனர். இந்த சம்பவம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.