
Tamil Nadu
கொரோனா காலகட்டத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம்-பள்ளிக் கல்வித்துறை;
கடந்த இரண்டு ஆண்டுகளாக சாமானிய மக்கள் பெரும் பொருளாதார கஷ்டத்தில் காணப்பட்டனர். ஏனென்றால் ஊரடங்கு, கொரோனா காலகட்டத்தின் மத்தியில் அவர்களால் உணவிற்கு கூட சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டு கடந்தனர்.
இந்த நிலையில் அதிர்ச்சிகரமான செயல் ஒன்று கொரோனா காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் காலகட்டத்தில் சுமார் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை தகவல் அளித்துள்ளது.
பதிமூன்று வயதை கடந்த எட்டாம் வகுப்பு மாணவி பத்து பேருக்கும் குழந்தை திருமணங்கள் நடத்தப்பட்டிருக்கிறது என்று பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது.
பதினோராம் வகுப்பில் 417 மாணவிகளுக்கும், பத்தாம் வகுப்பில் 45 மாணவிகளுக்கும், ஒன்பதாம் வகுப்பில் 37 மாணவிகளுக்கும் குழந்தை திருமணம் செய்துள்ளனர்.
ஒருபுறம் உணவுக்கே திண்டாடும் நிலைமை காணப்பட்டு இருந்தாலும் மற்றொருபுறம் அரசுக்கு விரோதமான செயல் நடைபெற்றிருந்தது மிகுந்த வேதனையான தகவலாக காணப்படுகிறது.
