இன்றைய தினம் தமிழகத்தில் தொடங்க மூன்றாவது நாளாக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இருவரும் தீவிரமாக விவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு தமிழகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி விவசாயிகளுக்கு பயிர் கடன் பற்றி சில முக்கிய தகவல்களை கூறியுள்ளார்.
அதன்படி ரூபாய் 501.69 கோடி பயிர் கடன் தள்ளுபடி என்று சட்டப்பேரவையில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி கூறினார். பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மீண்டும் பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார்.
சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 51 ஆயிரத்து 17 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். பயிர் கடன் தள்ளுபடி தொடர்பாக பேரவை விதி எண் 110-ன் கீழ் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இத்தகைய தகவலை அறிவித்தார். சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பயிர் கடன் தள்ளுபடி முறைகளை பட்டியலிட்டு கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி பேசினார்.