கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50,000 ரூபாய் இழப்பீடு!

உலகிற்கே மிகவும் அச்சத்தைக் கொடுக்கும் வைரஸ் கிருமியாக கொரோனா காணப்படுகிறது. இந்த கொரோனா முதலில் சீன நாட்டு கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகத்தில் உள்ள பல நாடுகளுக்கும் கொரோனா  பரவியது.கொரோனா

நம் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக இந்த கொரோனா நோயின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. ஆனால் இந்தியாவின் பெரும் முயற்சியால் தற்போது கொரோனா நோய் இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டன.

இருப்பினும் கொரோனா  உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்தன. அந்த கொரோனா  உயிரிழப்பிற்கு ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு நிவாரண தொகை வழங்கியது.

தற்போது இந்த கொரோனா  நோயினால் இறந்தவர் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் இழப்பீடு என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஆந்திராவில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50,000 இழப்பீடு வழங்க அந்த ஆந்திர அரசு முன்வந்து உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் இதுவரை 14 ஆயிரத்து 350 பேர் கொரோனாவால்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இத்தனை பேரின் குடும்பத்திற்கும் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தர முன்வந்துள்ளது ஆந்திர மாநில அரசு.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment