உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் 5,000 தமிழர்கள்! மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் -ஸ்டாலின் கோரிக்கை!!

உக்ரைன் நாட்டில் பல நாட்களாக போர் பதற்றம் நிலவியது. அதற்கு முடிவு கட்டும் விதமாக இன்று காலை உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்தப் போரின் விளைவாக அங்கு உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் அதிக அளவு ஏற்பட்டுள்ளது.

இந்த உக்ரைன் நாட்டில் நம் தமிழக மாணவர்கள் அதிக பேர் படிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன்படி உக்ரேனில் சிக்கியுள்ளவர்களை மீட்க முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உச்சமடைந்து உள்ளதால் தமிழக மக்கள் மற்றும் மாணவர்கள் நாடு திரும்பாமல் தவிக்கின்றனர்.

இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தில் கோரியுள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள், பணியில் உள்ள தமிழர்களை மீட்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் உட்பட தமிழ்நாட்டை சேர்ந்த 5,000 பேர் சிக்கியுள்ளனர். அனைத்து வகை அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து விட்டதாக தமிழக மாணவர்கள் கவலை அளித்துள்ளனர். விமான சேவையும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் தாயகம் திரும்ப இயலாத சூழல் உருவாகி உள்ளதாக அங்குள்ள தமிழக மாணவர்கள் கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment