வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த மாதம் முழுவதும் இந்தியாவில் கனமழை பெய்தது. குறிப்பாக தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா போன்ற தென்னிந்தியாவில் கனமழை பெய்தது.
இதன் விளைவாக தமிழகத்தின் தலைநகரம் சென்னை மழை நீருக்குள் மூழ்கியது. சென்னை மட்டுமின்றி அண்டை மாநிலமும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியும் கனமழை வெள்ளத்தால் மிகுந்த பாதிப்பிற்குள்ளானது.
இந்த நிலையில் புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5000 ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி கூறியிருந்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரயோசனமாக அமையும் என்றும் பேசப்பட்டது.
இதனை போல தமிழகத்திலும் வழங்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள கட்சியினர் வலியுறுத்தினர். இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியிருந்த மழை நிவாரண தொகை 5,000 ரூபாய் வழங்கும் பணியை தொடங்கினார்.